நைஜரின் முன்னாள் ஜனாதிபதிமிகமோசமான நிலையில் வாழ்கின்றார் அவரிடமுள்ள உணவு முடிவடையும் நிலையில் உள்ளதுஎன அவரது கட்சி தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா அது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.
26ம் திகதி இராணுவசதிப்புரட்சியை தொடர்ந்து ஜனாதிபதி முகமட் பசூமும் அவரது குடும்பத்தினரும் ஜனாதிபதி மாளிகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் அவர் பொதுமக்கள் முன்னிலையி;ல் காணப்படவில்லை அதேவேளை அவர் பதவியை இராஜினாமா செய்ய மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதிகுடும்பம் மி;ன்சாரம் இல்லாத நிலையில் வாழ்வதாகவும் அரிசியும் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள்மாத்திரம் எஞ்சியிருப்பதாகவும் ஜனாதிபதியின் கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் அவர் சிறந்த உடல்நிலையில் காணப்படுகின்றார் என அவரது ஆலோசகர் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கான குடிநீரும் குறைவடைகின்றது என அவரின் கட்சி தெரிவித்துள்ளது..
இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் நிலை குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
நைஜரின் ஜனாதிபதியின் பாதுகாப்பும் உடல்நிலையும் மிகமுக்கியமான விடயங்கள் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.