பிரான்ஸுக்கு விஜயம் செய்கிறார் மன்னர் சார்ள்ஸ்

பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் அடுத்த மாதம் பிரான்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மன்னர் சார்ள்ஸும் அவரின் துணைவியார் கமீலாவும் கடந்த மார்ச் மாதம் பிரான்ஸுக்கு விஜயம் செய்விருந்தனர்.

எனினும், பிரான்ஸில் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றதால் இவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இவ்விஜயம் நடைபெறும் என பிரெஞ்சு பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

இவ்விஜயம் தொடர்பில் ஆராய்வதற்காக மன்னர் சார்ள்ஸின் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த மாதம் பிரான்ஸுக்கு சென்றிருந்ததாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.