மரங்களை பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன!

சூரிய ஒளியை நான் இழந்துவிட்டேன் – மரங்களை பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன  என சீனாவில் மூன்றுவருடங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

முதல்தடவையாக கருத்து தெரிவித்துள்ள அவர் நான் சூரியனை தவறவிட்டுவிட்டேன் எனது ஜன்னல் ஊடாக சூரிஒளிவருகின்றது  எனினும் என்னால் பத்து மணித்தியலாங்கள் மாத்திரம் அதன் கீழ் நிற்க முடியும் என ஜெங் லே தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மக்களுக்கான பகிரங்க கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார் – தன்னை ஒவ்வொரு மாதமும் சந்திக்க வரும் இராஜதந்திரிகள் மூலம் அவர் இதனை அனுப்பியுள்ளார்.

நான் அவுஸ்திரேலியாவில் சூரியனை தவறவிட்டதாக எனக்கு நினைவில்லை,நான் மெல்பேர்னிற்கு வந்து சேர்ந்ததும் மழை பெய்யும் என நினைக்கின்றேன்,மரங்களை நான் பார்த்து மூன்றுவருடங்களாகிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் அரச ஊடகமான சிஜிடிஎன்னின் நிதி செய்தியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தவேளை செங் லேய் கைதுசெய்யப்பட்டார்.

முதல் ஆறுமாதங்கள் அவரை தனிமை சிறையொன்றில் தடுத்துவைத்திருந்தனர்.

கடந்த மார்ச்சில் அவர் தொடர்பான இரகசிய விசாரணைகள் இடம்பெற்றன.

சீனாவிற்கான அவுஸ்திரேலிய தூதுவர் அந்த விசாரணைகளை பார்வையிட முயன்றபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

இரகசிய தகவல்களை வழங்கினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள போதிலும் தெளிவான குற்றச்சாட்டுகள் வெளியாகவில்லை.