மியன்மாரில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 30 பேர் காணாமல் போயுள்ளனர்.
மியன்மாரின் வடபகுதி கச்சின் மாநிலத்திலுள்ள, ஜேட் எனும் பச்சைக்கல் சுரங்கமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இம்மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
ஏரியொன்றுக்கு அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மீட்புக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மியன்மாரில் இதே பகுதியில் 2020 ஆம் ஆண்டு மண்சரிவினால் 162 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.