ரஸ்யாவில் எரிபொருள் நிலையத்தில் தீ – வெடிப்பு சம்பவங்கள் 12 பேர் பலி

ரஸ்யாவின் டகெஸ்தானில் எரிபொருள் நிரப்பும்  நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் மகச்சலாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

25 பேர் உயிரிழந்திருக்கலாம் என வைத்தியர் ஒருவர் தெரிவித்திருக்கலாம்.

60பேர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்திற்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

இரவில் பாரியதீபரவுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

260 அவசரசேவை பணியாளர்களையும்  காயமடைந்தவர்களை மொஸ்கோவிற்கு கொண்டு செல்வதற்கு விமானங்களையும் அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.

மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் தீ 600 சதுரகிலோமீற்றருக்கு பரவியுள்ளது மேலும் வெடிப்புகள் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் காணப்பட்ட காரில் முதலில் தீ பரவியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.