ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன்

ஆப்பிள் ஐ-போன்களின் விலை வழக்கமாகவே மற்ற போன்களின் விலையை விட அதிகம் என கேள்விபட்டிருப்போம். அதே நேரம் பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன் ஒன்று ரூ.1.5 கோடிக்கு ஏலம் போய் உள்ளது. 2023-ம் ஆண்டிற்கான கோடை கால பிரீமியர் ஏலத்தை எல்.சி.ஜி. நிறுவனம் நடத்தியது.

இதில் 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது. ஆரம்ப விலையாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏலம் முடிவில் அந்த ஐ-போன் 1 லட்சத்து 90 ஆயிரத்து 322 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகி உள்ளது.

இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.56 கோடி ஆகும். இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர்.