ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர்.

இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 93 ஆக அதிகரித்து உள்ளது. பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேரழிவுகரமான காட்டுத்தீயைக் கையாள்வது குறித்து விசாரணையைத் தொடங்குவதாக ஹவாயின் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்தார்.

லஹைனாவில் வசிப்பவர்கள் முதன்முறையாக நகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டதால் இந்த இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது தெரிய வந்துள்ளது.