ஹெலிக்கொப்டர் விபத்து – குயின்ஸ்லாந்து கடற்பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் விழுந்துநொருங்கிய விமானப்படை ஹெலிக்கொப்டரில் பயணித்த படைதுறையினரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குயின்ஸ்லாந்தின் வைட்சண்டேதீவில் விழுந்துநொருங்கிய ஹெலிக்கொப்டரில் இருந்தவர்களின் மனித எச்சங்களே மீட்கப்பட்டுள்ளன.

ஹெலிக்கொப்டரின் விமானியின் பகுதி உட்பட சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன என அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

நீருக்கடியில் 40 மீற்றர் ஆழத்தில் இவை மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிதைவுகள் ஒருபேரழிவு அதிகவேகத்துடன் இடம்பெற்றதை வெளிப்படுத்துகின்றன என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நிலத்துக்குஅடியில் செலுத்தப்பட்ட வாகனங்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கியவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது.