18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகின்றது – கனடா பிரதமர் எதிர்பாராத அறிவிப்பு

18 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் தனது மனைவியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கனடா பிரதமரும் அவரது மனைவி சோபியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

2005 இல் திருமணபந்தத்தில் இணைந்த இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்த்தபூர்வமான கடினமான கருத்துப்பரிமாற்றங்களின் பின்னர் பிரிவதற்கு தீர்மானித்துள்ளோம் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவியும் இதேபோன்ற செய்தியை சமூக ஊடகங்களி;ல் வெளியிட்டுள்ளார்.

இருவரும் இது தொடர்பான சட்டபூர்வ ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

2015 இல் ட்ரூடோ பிரதமரான பின்னர் அவரும் மனைவியும் பல நிகழ்வுகளில் காணப்பட்டனர் எனினும் சமீபகாலமாக இருவரையும் ஒன்றாக பொதுநிகழ்வுகளில் காணமுடியவில்லை என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சோபி கணவருடன் காணப்படுவதை தவிர்த்துக்கொண்டார் என கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன

எனினும் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டனர்.