இளைஞர்கள் தங்களது உடலை வலுவாக்க ஜிம்முக்கு செல்வார்கள். அதுவும் குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு தொடர்ந்து ஜிம்முக்கு செல்பவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். ஆனால் 90 வயதிலும் ஜிம்முக்கு செல்லும் பாடிபில்டர் அமெரிக்காவில் உள்ளார். அவரது பெயர் ஜிம் ஆரிங்டன். இவர் தனது உடலை கட்டுமஸ்தாக வைப்பதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று வருகிறார். மேலும் தற்போதும் பாடிபில்டர் போட்டிகளில் பங்கேற்கிறார்.
சமீபத்தில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்ற இவர் 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் 3-வது இடத்தையும், 80 வயதுக்கு மேற்பட்டவருக்கான பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்கள் உடல்நலம் குறித்த ஒரு இதழுக்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜிம் ஆரிங்டன் கூறுகையில், நான் பிறக்கும் போது எடை குறைவாக இருந்ததாகவும், ஆரோக்கியமற்ற நிலையில் பிறந்ததாகவும் எனது பெற்றோர் கூறினர். இதனால் அடிக்கடி நோய்வாய்பட்ட என்னை காப்பாற்ற எனது பெற்றோர் மிகவும் போராடி உள்ளனர்.
எனது 15 வயதில் ஜிம்முக்கு செல்ல தொடங்கினேன். அப்போது நான் ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்க விரும்பினேன். அற்புதமான உடல் அமைப்பு இருந்தால் மட்டுமே அதை உருவாக்க முடியும் என்பதால் தொடர்ந்து ஜிம்முக்கு சென்றேன் என்றார்.