யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், பலாலி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், வளலாய் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், விண்மீன் விளையாட்டுக் கழகம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஆகிய பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்திய மாபெரும் குருதிக் கொடை முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (15.11.2026) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை யாழ்.பலாலி அந்தோனிபுரம் வனத்து அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
மேற்படி குருதிக் கொடை முகாம் நிகழ்வில் 31 ஆண்களும் 05 பெண்களும் என 36 குருதிக் கொடையாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுக் குருதிக் கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்குப் பங்களிப்பு வழங்கினர். குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.