லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை (17.11.2026) நள்ளிரவு முதல் வீட்டுச் சமையல் எரிவாயுச் சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளது. 

இதன்பிரகாரம், முன்னதாக 6740 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோக் கிராம் எரிவாயுச் சிலிண்டரின் புதிய விலை 5995 ரூபாவாகவும், 2720 ரூபாவாகவிருந்த ஐந்து கிலோக் கிராம் எரிவாயுச் சிலிண்டரின் விலை 2398 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.