கடந்த இரு வாரமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை நேற்றைய தினம் சனிக்கிழமை நிறைவுசெய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன் இல்லமும் மோதிக்கொண்டன.
சென்ற வாரம் முதல் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற ஆரம்பித்தன முதலில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களான பழம் பொறுக்குதல், சாக்கு ஓட்டம், கயிறு அடித்தல், தண்ணீர் நிரப்புதல், கல்லுப்பை எறிதல், தேசிக்காய் கரண்டி என பலதரப்பட்ட விளையாட்டுகளும் கடந்த வாரம் நிறைவுசெய்தார்கள். 50 புள்ளிகளினை மேலதிகமாக பெற்று எல்லாளன் இல்லம் முன்னிலை வகுத்து நின்றார்கள்.
இரண்டு நாட்கள் நடைபெற்று இறுதியாக கடந்த 24ஆம் திகதி மிகவும் பிரமாண்டமான முறையில் அணிநடை தொடக்கம், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், வினோத உடை, மற்றும் அனைத்து வித ஓட்டங்களுடன் இடம்பெற்ற விளையாட்டு போட்டி மலை 5 மணியளவில் நிறைவு பெற்றன.
இப் போட்டிக்கு கென்ற் காவல்துறை,டார்ட்போர்ட தீயணைப்பு உறுப்பினர்கள் தொடக்கம் பலர் கலந்து சிறப்பித்தார்கள். பெற்றோர்களுக்கு 100m, 400m ஓட்டம், தேசிக்காய் கரண்டி, கயிறு இழுத்தல் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து இறுதியில் இந்த வருடத்திற்கான வெற்றி கேடயத்தை எல்லாளன் இல்லம் தனதாக்கி கொண்டது. மாணவர்கள் மிகவும் உற்சாகமா கேடயத்தை தூக்கியேந்தியபடி மைதானத்தை சுற்றி ஓடித்திருந்தார்கள். இறுதியாக தேசியக் கொடி கையேந்தலுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.