பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 17 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு பஸ்ரில் பகுதியில் நேற்று (14.08.2023) திங்கட்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து கலந்துகொண்ட‌அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து நினைவுரைகள்‌, கவிதை என்பன இடம்பெற்றன.
வழமை போன்று பல  வெளிநாட்டவர்களும் எமது நினைவேந்தலுக்கான காரணத்தைக் கேட்டு அறிந்துகொண்டனர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.