முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் திணைக்களப் புதிய உதவிப் பணிப்பாளராக ம.இராஜேந்திரன் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றிய உதவிப் பணிப்பாளர் மன்னார் மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டது முதல் முல்லைத்தீவு மாவட்டக்கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்துக்கு நிரந்தரப் பணிப்பாளர் இன்றியே செயற்பட்டு வந்தது. இந்த இடத்திற்கே தற்போது இராஜேந்திரன் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த ககவத்தயினால் நியமிக்கப்பட்டுள்ளார்.