அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் பிரதி​நி​தி​கள் சபை நீதித்​துறைக் குழு​வைச் சேர்ந்த ஜனநாயகக் கட்​சி​யினர் 53 பக்க அறிக்​கை​யை வெளி​யிட்​டுள்ளனர். அதில், ஜனநாயகக் கட்சியினர் நடத்​திய நேர்​காணல்​களில், சுவிட்​சர்​லாந்து முன்னாள் அழகி பியாட்​ரிஸ் கியூல் அதிபர் ட்ரம்புக்கு எதிராக தெரி​வித்த கருத்​துகள் இடம் பெற்​றுள்​ளன.

அறிக்​கை​யில், பியாட்​ரிஸ் கியூல் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1993-ம் ஆண்டு எனக்கு 24 வயது. நியூயார்க்​கில் உள்ள பிளாசா ஓட்டலில் நடை​பெற்ற அழகிப் போட்​டி​யில் பங்​கேற்​றேன். அப்போது தற்​போதைய அமெரிக்க அதிபர் ட்​ரம்ப்பை முதன்​முதலில் சந்​தித்​தேன். அந்​தக் கால​கட்​டத்​தில் அந்த ஓட்​டல் ட்ரம்ப்புக்​குச் சொந்​த​மானதாக இருந்​தது.

ட்​ரம்ப் அங்​கிருந்து சென்​றதும், பிளாசா ஓட்​டலின் மேல்​தளத்​தில் உள்ள ஒரு அறைக்கு வரு​மாறு அவரது பிரதி​நிதி ஒரு​வர் என்னை அழைத்​தார். அந்த அறைக்​குள் நான் நுழைந்​ததும், ட்​ரம்ப் என்னைப் பிடித்து வலுக்​கட்​டாய​மாகப் பாலியல் வன்​கொடுமை செய்​தார். அப்​போது, எனது உடை கிழிந்​ததுடன் உடலின் ரத்​தக்​ காயங்​களும் ஏற்​பட்​டன. இவ்​வாறு கியூல் தெரி​வித்​துள்​ளார்.