சிரியாவில் பூகம்ப இடிபாடுகளுக்குள் தாயின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாமல் மீட்கப்பட்ட குழந்தை

சிரியாவின் பூகம்பத்தினால் அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் அப்பிரா ஆறுமாதங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டவேளை அவர் தனது தாயின் தொப்பிள்கொடி துண்டிக்கப்படாதவராக காணப்பட்டார். குழந்தையை பிரசவித்த பின்னர் தாயார் உயிரிழந்திருந்தார்.

குழந்தை பூகம்ப இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்படும் வீடியோ உலகின்  கவனத்தை தன்பக்கம் திரும்பியிருந்தது.

அதன் பின்னர் அவ்ரா ஆச்சரியமான விதத்தில் வளர்ச்சியடைந்துள்ளார்.

இன்றுடன் அவர் பிறந்து  ஆறு மாதங்கள் அவர் வழமையான  மகிழ்ச்சியான  ஆரொக்கியமான குழந்தையாக காணப்படுகின்றார்.

உறவினர்களே அவரை வளர்க்கின்றனர்-துருக்கி எல்லையில் உள்ள சிரிய நகரான ஜின்டயிரிசில் அவர்கள் தங்களின் ஏனைய ஏழு குழந்தைகளுடன் அவ்ராவையும் வளர்க்கின்றனர்.

பிறந்து ஆளுமாதங்களே ஆகின்ற போதிலும் அவள் தனது தந்தை மற்றும் சகோதரி நவாராவை நினைவூட்டுகின்றார் – குறிப்பாக சிரிக்கும்போது சகோதரியை நினைவுபடுத்துகின்றாள் – அவர்கள் பூகம்பத்தில் இறந்துபோனார்கள் என்கின்றார் குழந்தையை வளர்க்கும் உறவினர்.

2023 பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி துருக்கி சிரிய எல்லையில் பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியது-44000 பேர் உயிரிழந்தனர்.

ஜின்டயிரிஸ் நகரத்தை பூகம்பம் தாக்கிய சில நிமிடங்களில் அவ்ராவின் தாயாருக்கு பிரசவவலியேற்பட்டது-வீட்டின் இடிபாடுகளுக்கு மத்தியில் அவர் பிள்ளையை பிரசவித்தார். மீட்பு பணியாளர்கள் அவரை மீட்பதற்கு முன்னர் அவர் உயிரிழந்தார். அந்த குடும்பத்தில் அந்த குழந்தை மாத்திரம் உயிர் தப்பியது.

தந்தையும் தாயாரும் நான்கு சகோதரங்களும் உயிரிழந்தனர்.

அபுருடைனாவின் வீடு இடிந்து தரைமட்டமாகியுள்ளதை நாங்கள் பார்த்தோம்இ எனது மனைவி அலறத்தொடங்கினார் என அன்றைய தினைத்தை நினைவுகூர்ந்தார் காலில்.

அவ்ரா இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட தருணத்தை அவர் நினைவுகூர்ந்தார்-கூரை அவர்கள் மீது விழுந்திருந்ததுஇஒரு பெண்ணின் உடலை மீட்டுள்ளதாக யாரோ சொன்னார்கள் நான் அங்கு சென்றதும் கைகளால் அந்த பகுதியை தோண்டதொடங்கினேன் – அப்போது ஒரு குரலை கேட்டேன்- அது ஒரு குழந்தையின் குரல் – அது ஒரு குழந்தை தாயின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாமலிருந்தது என தெரிவிக்கும் அவர் நாங்கள் அந்த குழந்தையை காப்பாற்றுவது குறித்து உறுதியாகயிருந்தோம்இஅந்த குடும்பத்தினை நினைவில் கொள்வது எஞ்சியிருந்தது அவள் மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.

குழந்தை காப்பாற்றப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலானது-வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு அயா என பெயரிடப்பட்டனர் – அராபிய மொழியில் அதிசயம் என அர்த்தம்.

குழந்தைக்கு பலகாயங்கள் உள்ளன அவள் சுவாசிக்க முடியாத நிலையில்  காணப்படுகின்றாள் என வைத்தியர்கள் தெரிவித்தனர்-ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அந்த காயங்களை தற்போது காணமுடியவில்லை.

மீட்கப்பட்ட பின்னர் அவள் சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டாள். இடிபாடுகளின் தூசிகளே அதற்கு காரணம் தற்போது அவள் நல்லநிலையில் காணப்படுகின்றாள்.

கடந்த ஆறுமாதங்கள் அந்த குழந்தையை பொறுத்தவரை மிகவும் கடினமானவை அவள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால்- பலர் அவளை தத்தெடுப்பதற்கு முயன்றனர்இஹாலிலும் அவரது மனைவியும் தாங்களே குழந்தையின் உண்மையான உறவினர்கள் என்பதை நிரூபித்த பின்னரே அவர்கள் குழந்தையை தத்தெடுப்பதற்கான அனுமதி கிடைத்தது.ஒரு கட்டத்தில் அவர்கள் அவ்ராவை என்னிடம் தரவிரும்பவில்லை என தோன்றியது என்கின்றார் ஹாலில்.

அவர்கள் மரபணுபரிசோதனைக்கு காத்திருந்தவேளை இந்த குழந்தை குறித்து பெரும் ஆர்வம் காணப்பட்டது இதனால் குழந்தையை யாராவது கடத்தக்கூடும் என காலில் குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.

அவர்கள் பெருமளவு நேரத்தை வைத்தியசாலையிலேயே  செலவிட்டனர்இமுன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் குழந்தையை பாதுகாப்பதற்கு உதவினார்கள்  என தெரிவிக்கும் காலில் அவர்களில் பலர் உதவினார்கள் அவ்ராவின் அறைக்கு அடுத்த அறையில் காத்திருந்து பாதுகாப்பளித்தார்கள் எனவும் தெரிவிக்கின்றார்.

இறுதியில் மரபணுபரிசோதனை மூலம் காலில் குழந்தையின் இரத்த உறவினர்  என்பது உறுதியானதுஅந்த குழந்தை வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டது.

காலில் அதன் பின்னர் செய்த முதல்வேளை  குழந்தைக்கு அவ்ரா என பெயர் சூட்டியதே – தாயின் பெயரை சூட்டினார்.

அவள் தற்போது எனது குழந்தைகளில் ஒருவர் என தெரிவிக்கும் காலில் அவளை விட்டு என்னால் நிறைய நேரம் பிரிந்திருக்க முடியாது  என குறிப்பிடுகின்றார்.

அவள் வளர்ந்ததும்நான் அவளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிப்பேன் அவளது அன்னை தந்தையின் படங்களை காண்பிப்பேன்என்கின்றார் காலில்.

பிபிசி