அவுஸ்திரேலியாவில் காலநிலை நெருக்கடி தீவிரமடைகின்றது – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் காலநிலை நெருக்கடி தீவிரமடைவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் முன்னர் எப்போதையும் விட வெப்பம் மிகஅதிகமாக காணப்பட்ட நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஜூலை மாத வெப்பநிலை வழமையான சராசரி வெப்பநிலையை விட 1.2சென்டிகிரேட் அதிகமாக காணப்பட்டது கான்பெராவை தவிர ஏனைய அனைத்து தலைநகரங்களிலும்  வழமையை விட அதிகளவு வெப்பநிலை காணப்பட்டது என வானிலை ஆய்வு பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிட்னி மெல்பேர்ன் ஹொபார்ட் உட்பட பல முக்கிய நகரங்கள் தங்களின் ஜூலை மாத வெப்பத்தில் சாதனை அளவை எட்டியுள்ளன.

சில நகரங்களில் 140 வருடங்களில் வெப்பநிலை மிக அதிகமானதாக காணப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குளிர்காலங்கள் வெப்பம்மிகுந்ததாக மாறுவதற்கும் உலகம்முழுவதிலும் இதேபோக்கு காணப்படுவதற்கும் உலகளாவிய வெப்பமயமாதலே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உருவாகிவரும் எல்நினோ மற்றும் உள்ளுர் காலநிலைஅமைப்புகளும் இதற்கு காரணம் .

கடந்த இரண்டுமாதங்களாக அவுஸ்திரேலியாவின் அனேகபகுதிகளில்அதிகளவுஅழுத்தம்காணப்படுவதாக தெரிவித்துள்ள மெல்பேர்ன் பல்கலைகழக பேராசிரியர் கலாநிதி அன்ரூ கிங் இது கண்டத்தின் உட்பகுதியை சூடானதாக மாற்றியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கண்டத்தின் உட்பகுதியிலிருந்து காற்றுவீசும்போது அடிலெய்ட் சிட்னி மெல்பேர்ன் போன்ற பகுதிகளில் வெப்பமான நாட்கள் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தரவுகள் மூலம் வெளியாகியுள்ளது-அடிலெய்ட் மற்றும் சிட்னியில் இந்த நிலை காணப்பட்டுள்ளது.

இது வழமைக்கு மாறான விடயம் ஆனால் புதிதல்ல என கிங் தெரிவித்துள்ளார்.