திருமணவாழ்க்கை முடிவிற்கு வந்த பின்னர் அரசியலில் இருந்து விலக தீர்மானித்தேன்

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனிஅல்பெனிஸ் தனதுதிருமண வாழ்க்கை முடிவிற்கு வந்ததை தொடர்ந்து அரசியலில் இருந்து விலகுவது குறித்து சிந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

இரண்டுதசாப்த காலத்தின் பின்னர் தங்கள் திருமணவாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டதாக கார்மெல் டெபுட் தெரிவித்ததை தொடர்ந்து நான் 2019 தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்தித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

2019 புத்தாண்டுதினத்தில் கார்மெல் டெபுட் தனது முடிவை  தெரிவித்திருந்தார்- அந்த முடிவு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

நான் அந்தவேளை சிறந்த மனோநிலையில் இருக்கவில்லை என அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

திருமணமுடிவு குறித்த அதிர்ச்சியிலிருந்து விடுபட சிறிது காலம் எடுத்ததுஅதன் பின்னர் நான் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன் அங்கும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதா என சிந்தித்தேன் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

நான் சோர்ட்டன்அரசாங்கத்தில் ஒரு முறை அமைச்சராக பதவிவகித்த பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது என தீர்மானித்தேன் எங்கள் கட்ச அவ்வேளை தேர்தலில் வெற்றிபெறும் என நினைத்தோம் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் பில்சோர்ட்டன் தலைமையிலான தொழில்கட்சி  தேர்தலில் தோல்வியடைந்ததுஇஇதன் காரணமாக  அன்டனி அல்பெனிஸ் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதா என்பது குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

நாங்கள் தேர்தலில் தோற்றபின்னர் நான் அரசியலில் இருந்து விலகுவதற்கு தயாராகயிருந்தேன் ஆனால் தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சியின் புதிய தலைவராக வரக்கூடிய ஒரே நபர் என்பதால் கட்சி தலைவராக தீர்மானித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.