பெண்ணின் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட முன்னாள் காதலன்: 120 கோடி டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்கப் பெண்ணொருவரின் அந்தரங்கப் படங்களை அவரின் முன்னாள் காதலன் இணையத்தில் வெளியிட்டதால் பாதிக்கப்பப்பட்ட பெண்ணுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.

தனது முன்னாள் காதலனுக்கு எதிராக தொந்தரவு குற்றச்சாட்டு சுமத்தி, 2022 ஆம் ஆண்டு இப்பெண் வழக்குத் தொடுத்திருந்தார்.

தம் இருவருக்கும் இடையிலான காதல் உறவு முறிந்தபின் தன்னை அவமானப்படுத்துவதற்காக தனது அந்தரங்கப் புகைப்படங்களை தனது முன்னாள் காதலன் இணையத்தில் வெளியிட்டார் என அப்பெண் குற்றம் சுமத்தினார்.

இவ்வழக்கை விசாரித்த டெக்ஸாஸ் நீதிமன்றம் இப்பெண்ணுக்கு 120 கோடி அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட அளவு இழப்பீட்டுப் பணத்தை வசூலிப்பது சாத்தியமில்லை என்றாலும். இத்தீர்ப்பானது படங்கள் அடிப்படையிலான பாலியல் துஷ்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்வர்களுக்கு ஒர வெற்றியாகும் என அப்பெண்ணின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.