டசாலை பாதணிகள், பைகள் விலை குறைப்பு

பாடசாலை பாதணிகள் மற்றும் பைகளின் விலையை 10% குறைக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாடசாலை பாதணிகள் மற்றும் பைகள் உற்பத்தியாளர்களுடன் இன்று நிதியமைச்சில் நடந்த நீண்ட கலந்துரையாடலின் பின்னரே உற்பத்தியாளர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த உற்பத்தியாளர்கள், தற்போது சந்தையில் உள்ள தொகையையும் புதிய விலை திருத்தத்தின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அந்த நன்மையை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.